இயற்கை மருத்துவத்தின் வரலாறு: ஒரு காலமற்ற பயணம்
- surya venu
- Feb 23
- 2 min read
இயற்கை மருத்துவம் பற்றிய விவரங்கள் பல அதில் இயற்கை மருத்துவம் பற்றிய வரலாறு ஒன்று இதை அறிய பலருக்கும் ஆர்வம் இருக்கிறது மற்ற மருத்துவங்களுக்கும் வரலாறு உண்டு அலோபதி ஹோமியோபதி போன்ற மருத்துவங்களுக்கு இரண்டு நூற்றாண்டு வரலாறு உண்டு அதேபோல யுனானி அக்குபஞ்சர் ஆயுர்வேதம் சித்த மருத்துவம் போன்ற மருத்துவங்களும் இவை எல்லாமே கால அளவில் வரலாற்றில் தெரியக்கூடியவை இதன் ஆரம்ப புள்ளிகளை ஓரளவு யூகிக்க முடியும் 20 ஆம் நூற்றாண்டுகளில் இம்மருத்துவ முறைகள் பெரிய அளவில் பயன்பாட்டிற்கு வந்தன இதில் சிலவற்றிற்கு துவக்க வருடங்களைக் கூட கூறி விட இயலும் ஹோமியோபதி டாக்டர் ஹானிமன் வந்த பிறகுதான் அவர் கண்டுபிடித்த பிறகுதான் வரலாறு ஆயுர்வேதம் முன்னரே இருந்தாலும் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அது வெற்றி அடைகிறது சித்த மருத்துவம் 1960 ஆண்டிற்கு பிறகு பிரபலம் அடைகிறது இயற்கை மருத்துவம் அவ்வாறானது அல்ல இதற்கு காலம் வரம்பு கிடையாது மனித இனத்திற்கு நம்மிடம் முழுமையான வரலாறு இல்லை ஏதோ தெரிந்த அளவில் சொல்லிக் கொண்டு இருக்கிறோம் உயிர்கள் தோன்றிய பொழுதே இயற்கை மருத்துவம் தோண்டிவிட்டது இயற்கை வாழ்வியல் வளர்ச்சி உணவு உறக்கம் இனப்பெருக்கம் இதெல்லாம் சேர்ந்ததே இயற்கை மருத்துவம் எனவே இதற்கு காலம் கிடையாது ஆனால் வேறு மருத்துவமே இல்லாத பொழுது இதற்கு இந்த பெயரை இல்லை வீட்டில் ஒரு கார் மட்டும் இருந்தால் காரை எடுத்து வா என்று மட்டுமே கூறுவோம் ஆனால் பல கார்கள் இருந்தால் கம்பெனி பெயரை கூறி அதை எடுத்து வா என்று கூறுவோம் மற்ற மருத்துவங்கள் வந்த பிறகு இயற்கை மருத்துவத்திற்கும் பெயரிட வேண்டி வந்தது பாலுடன் நெய் கலந்துள்ளது போல மக்களுடைய ஆரம்ப காலங்களில் இயற்கை மருத்துவம் அவர்களுடைய வாழ்வியலோடு கலந்து இருந்தது நூறு ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் கடைப்பிடித்து வந்ததே இயற்கை மருத்துவம் அப்போது பசித்தால் உண்டார்கள் பசியில்லை என்றாலும் பருவ காலம் மாறுபாடுகளின் போது இயல்பாகவே உணவருந்த மாட்டார்கள் மின்சாரம் கிடையாது மண்ணெண்ணெய் கூட அப்பொழுது கிடைப்பது அரிது கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் அது பெரிய அளவில் பயன்பாட்டிற்கு வரவில்லை பொருளாதாரம் அதனை வாங்கக்கூடிய அளவில் இல்லை எனவே அனைவரும் இரவில் உணவருந்துவதில்லை இரவு முழுவதும் இருள் அமைதி ஓய்வு இப்படித்தான் இருந்தது அடுப்பை பற்ற வைப்பது காளை விடிந்த பிறகு தான் சிம்னி ஹரிக்கேன் விளக்குகள் பயன்பாட்டிற்கு வந்த பிறகுதான் சில சமயங்களில் முன்னிரவில் அடுப்பை பற்றவைத்து சமைப்பார்கள் விறகு அடுப்புக்களே பயன்பாட்டில் இருந்தன அதற்கு விறகு குச்சி போன்றவற்றை சேகரித்து பயன்படுத்தினார்கள் அப்பொழுது தீப்பெட்டி கூட உபயோகத்தில் இல்லை அடுப்பில் இருந்தே அதாவது கங்கு என்று சொல்வார்கள் சாம்பல் பூத்த நெருப்பு என்று கூறுவார்கள் அது அணியும்போது பக்கத்து வீட்டில் இருந்து அதைப் பெற்றுக் கொள்வார்கள் இம்மாதிரியான தகவல்களை நாம் சிந்திக்க வேண்டும் ஆய்வு செய்ய வேண்டும் இந்த மன்னர் ஆண்டார் அந்த மன்னர் வரி போட்டார் மரங்களை நட்டார் போன்றவற்றை மட்டுமே படிப்பது வரலாறு அல்ல முதலில் அடுப்பை நெருப்பை பயன்படுத்தி சமைத்ததே இயற்கைக்கு முரண்பாடானது உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உணவை நேரடியாகவே இயற்கையில் இருந்து பெறுகின்றன ஆரம்பத்தில் இவற்றை இயன்ற அளவு இயற்கையாகவே பயன்படுத்தினர் கம்பை முளை கட்டி உண்டார்கள் பற்களும் தாடையும் பலம் பெற்றன ராகி கொய்து தேய்த்து உண்டனர் அவல் போன்றவற்றை எடுத்துக் கொண்டார்கள் ஒரு நபர் இரண்டு கரும்பை உண்பார் அவ்வளவு பலம் நீர் அருந்துவது கூட பெரிய செம்பில் அது லிட்டர் கணக்கில் இருக்கும் அருந்தி விடுவார்கள் அந்த நீர் உடலினுள் சென்று உடலை சுத்தமாக்கி சிறுநீராக வெளியேறிவிடும் நிலக்கடலை போன்றவற்றையும் நேரடியாகவே உண்டார்கள் இயற்கை மருத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் கிராமத்து எளிய மனிதர்களுடைய வாழ்க்கையில் இருந்து விவசாயிகளிடமிருந்து தொழிலாளிகளிடமிருந்து வியாபாரிகளிடமிருந்து புரிந்து கொள்ள முயல வேண்டும் எல்லோரும் நடந்தார்கள் நடப்பது என்பது ஒரு இயற்கை மருத்துவம் வரலாறு கிராம வாழ்க்கையில் ஆரம்பிக்கிறது அமெரிக்க இயற்கை மருத்துவ வரலாறு ஐரோப்பிய இயற்கை மருத்துவ வரலாறு போன்றவற்றை பின்னர் காணலாம் முதலில் நமது முன்னோர்கள் கடைபிடித்த விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் ஏதேனும் அடிபட்டால் சில இலைகளின் சாற்றை பூசினார்கள் சில சமயம் எச்சில் சில சமயம் சிறுநீர் போன்றவற்றை கூட பயன்படுத்தி இருக்கிறார்கள் கண் பிரச்சனைகளுக்கு தாய்ப்பாலை பயன்படுத்தி குணமாக்கினார்கள் சில மலர்களை மருந்தாக எடுத்தார்கள் குளிப்பதற்கு குளிர்ந்த நீரை பயன்படுத்தினார்கள் மண்ணை பூசி குளித்தார்கள் எந்த ரசாயனங்களையும் பயன்படுத்தவில்லை வெயிலில் காய்ந்தார்கள் மழையில் நனைந்தார்கள் செருப்பு இல்லாமல் நடந்தார்கள் உலகம் முழுவதும் மக்கள் இவ்வாறு தான் வாழ்ந்தார்கள் இந்த வரலாற்றை வெறுமனே தெரிந்து கொள்வதால் எந்த பயனும் இல்லை படிப்பதாலோ அறிவதாலோ கேட்பதாலோ பார்ப்பதாலோ பயன் இல்லை செயல் செயல் செயல் செயல் மட்டுமே உங்களுக்கு பயனை கொண்டு வந்து சேர்க்கும்


Comments