top of page
Search

இயற்கை மருத்துவத்தில் ஜெர்மனியின் பங்கு

இயற்கை மருத்துவத்தில் ஜெர்மனியின் பங்கு

இந்தப் பகுதியில் ஜெர்மனி இயற்கை மருத்துவ வரலாறு பற்றி பார்க்கலாம் உலகின் மற்ற நாடுகளை போலவே ஜெர்மனியில் ஆரம்பத்தில் மூலிகை மருத்துவம் பச்சிலை மருத்துவம் போன்றவை வழக்கில் இருந்தன ஜெர்மனியின் இயற்கை மருத்துவம் ஒரு நீண்ட மற்றும் செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டது 19ஆம் நூற்றாண்டில் இங்கு இயற்கை மருத்துவம் எழுச்சி கண்டது வின்சென்ட் ப்ரிஸ் நீட்ஸ் நீர் சிகிச்சையின் பிதாமகராக கருதப்படுகிறார் நீரின் சக்தியை பயன்படுத்தி அவர் பல்வேறு நோய்களை குணமாக்கினார் இவருடைய காலம் 1799 முதல் 1831 வரை இவர் ஒரு சுய கல்வியாளர் மருத்துவர் அறிஞர் நீர் சிகிச்சையின் முன்னோடி இவர் மனித உடல் தன்னைத்தானே குணப்படுத்தும் சக்தி கொண்டது என்று நம்பினார். நீரின் தூய்மை இயக்கம் மற்றும் வெப்பநிலை மாறுபாடு மூலமாக உடலின் இயற்கை நலனை அதிகரிக்க முடியும் என்று நிரூபித்தார் குளிர் நீர் குளியல் தொட்டி குளியல், குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் உடலை போர்த்துதல், தேய்த்து விடுதல், நீரில் மிதக்க வைத்தல் போன்ற முறைகளை பயன்படுத்தினார் நீர் உடலின் அனைத்து கழிவுகளையும் நீக்கும் என்று கருதினார் ஆரோக்கிய வாழ்விற்கு தூய நீர் அருந்துதல், சுத்தமான காற்றை சுவாசித்தல், சீரான உடற்பயிற்சி, பசுமை உணவுகள், மற்றும் மது புகை ஆகியவற்றை தவிர்த்தல் போன்றவை அவசியம் என போதித்தார் அவர் முழுக்க முழுக்க நீர், உணவு ,காற்று தூக்கம், உடற்பயிற்சி இவற்றை பயன்படுத்தியே நோய்களை குணமாக்கினார்.இது அக்காலத்தில் பெரிய மாற்றமாக கருதப்பட்டது. அவரை மக்கள் வாட்டர் டாக்டர் என்று அழைத்தனர். 1822 ஆம் ஆண்டு அவர் நீர் சிகிச்சை முறைகளை உருவாக்கினார். அவரது முறைகள் ஜெர்மன், பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலும் பிரபலமானது அடுத்ததாக செபாஸ்டியன்

க்நைப் .காலம் 1821 முதல் 1917 வரை . இவர் நீர் சிகிச்சை மூலிகை மருத்துவம், உடற்பயிற்சி, உணவு முறை மாற்றம் ,ஓய்வு திட்டம் இவைகளை ஒருங்கிணைத்து ஒரு பரந்த சிகிச்சை முறையை உருவாக்கினார். இவரின் முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்று குளிர்ந்த நீரையும் சூடான நீரையும் மாற்றி மாற்றி பயன்படுத்துவதன் மூலம் ரத்த ஓட்டத்தை தூண்டி நோய்களை குணப்படுத்துதல். குளிர்ந்த நீர் குளியல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. சூடான நீர் குளியல் தசைகள் மற்றும் நரம்புகளை ஓய்வு பெறச் செய்கிறது. குளிர்ந்த நீரில் நடந்து செல்வதால் ரத்த ஓட்டம் சீரடைகிறது. உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் நீரை பீச்சி அடிப்பதன் மூலமும் தொடர்ச்சியாக ஊற்றுவதன் மூலமும் ஆரோக்கியம் மேம்படுகிறது. இவருடைய மருத்துவ முறையில் தினசரி உடல் இயக்கம் மிகவும் அவசியமானதாக கருதப்பட்டது. இயற்கை சூழலில் நடப்பது, உடற்பயிற்சி செய்வது, உடலை பராமரிப்பது ஆகியவை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உணவை பொருத்தவரை இயற்கையாக விளைவிக்கப்பட்ட சுத்தமான உணவுகளை மட்டுமே உணவு முறையில் சேர்ப்பது , அதிக நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துள்ள நீர் சத்து மிகுந்த உணவுகளை சேர்ப்பது, மிதமான உணவுப் பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது போன்ற கருத்துக்களை வலியுறுத்தினார் . மேலும் மன அமைதிக்கு தியானம், யோகா போன்றவற்றை ஊக்குவித்தல், வேலை , ஓய்வு, உறக்கம் ஆகியவற்றை முறைப்படுத்துதல் , மன அழுத்தத்தை குறைக்க இயற்கையை அணுகுதல் போன்றவற்றை எடுத்துக் கூறினார் ஜெர்மனியின் மற்றொரு புகழ்பெற்ற மருத்துவர் லூயி கூனே. இவர் நோய்களின் மூல காரணம் உடலில் சேரும் கழிவுகளை என்ற கொள்கையை முன் வைத்தார். நோய்களை குணமாக்க வேண்டுமானால் உடலில் உள்ள கழிவுகளை முறையாக நீக்க வேண்டும் என்று கூறினார்.

கூனே உருவாக்கிய இடுப்பு குளியல் மிகவும் பிரபலமானது. இது உடலில் மாசு சேர்ந்து சூடாக்கும் பகுதிகளை குளிர்வித்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. உணவு முறையை பொறுத்தவரை, காய்கறிகள், பழங்கள், பழங்களின் சாறுகள் எடுத்துக் கொள்வது, மாமிசம் மற்றும் மசாலா கலந்த காரசார உணவுகளை தவிர்ப்பது, சமைத்த உணவுகளை குறைத்து, சமைக்காத உணவுகளை கூட்டுவது போன்றவற்றை வலியுறுத்தினார் . மேலும் மன அழுத்தம், உடலில் கழிவுகளை சேர்க்கும் .மன அமைதிக்காக நோன்பு, தியானம், இயற்கை சூழலில் இருத்தல் போன்றவற்றை கடைபிடிக்குமாறு கூறினார். உடல் பருமன் குறைக்க உடற்பயிற்சி அவசியம் என்பதை எடுத்துக் கூறினார். டி டாக்ஸிஃபிகேஷன் தெரபி சிட்ஸ் பாத் காலன் கிளீனிங் ஆகிய அவரது கொள்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் இன்றும் இயற்கை மருத்துவத்தில் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாமுவேல் ஹானி மென் இருபதாம் நூற்றாண்டில் உருவாக்கிய ஹோமியோபதி மருத்துவம் ஜெர்மனியில் இயற்கை மருத்துவம் ஆகவே போற்றப்படுகிறது . ஜெர்மனியில் தற்போதும் இயற்கை மருத்துவம் மக்களால் விரும்பப்படுகின்ற சிகிச்சை முறையாகவே வளர்ந்து வருகிறது. பலரும் மருந்து சார்ந்த அலோபதி மருத்துவத்துடன் , இயற்கை மருத்துவத்தையும் இணைத்தே பயன்படுத்தி வருகின்றனர்

 
 
 

Comments


bottom of page