top of page
Search

இயற்கை மருத்துவத்தில் அமெரிக்காவின் பங்கு

இயற்கை மருத்துவத்தில் அமெரிக்காவின் பங்கு குறிப்பிடத்தக்கது பெரும் நிலப்பரப்பை உடைய அமெரிக்காவின் வளங்களை ஸ்பெயின் இங்கிலாந்து போன்ற நாடுகள் அங்கு இருந்த செவ்விந்திய மக்களிடம் இருந்து கவர்ந்து கொண்டனர் பெரும்பாலும் செவ்விந்தியர் நோய்வாய்ப்பட மாட்டார் அப்படியே சிறிய நோய்கள் வந்தாலும் எளிய மருத்துவத்தின் மூலம் சரி செய்து கொண்டனர் அதேபோலத்தான் இந்தியாவிலும் அதேபோலத்தான் சீனாவிலும் எகிப்திலும் அந்த மருத்துவ முறைகளுக்கு தனியாக பெயர் கிடையாது ஆங்கில மருத்துவ முறையான அலோபதி வந்த பிறகு தான் அதற்கு பெயரிட வேண்டிய அவசியம் நேரிட்டது ஆங்கில மருத்துவம் வந்த பிறகு மருத்துவம் என்பது வணிகமாக மாறியது மருந்துகள் வேதிப்பொருட்கள் அதிகம் பயன்பாட்டில் வந்தது அதன் பிறகு நோய்களும் சிக்கலாக மாறின ஆரம்ப காலங்களில் விஷக்கடி விபத்துக்கள் வாந்தி சளி காய்ச்சல் போன்று எளிமையாக இருந்த நோய்கள் திரிந்து பெரும் நோய்களாக வடிவெடுத்தனர் அதன் பின்னர் பல்வேறு மருத்துவ முறைகளும் ஒரு வடிவம் பெறத் தொடங்கினர் எந்த விதையும் முளைத்துக் கொண்டிருக்கும் பொழுது இரண்டு இலை விட்டு நிற்கும் பொழுது சரியாக அடையாளம் காண முடியாது வளர்ச்சி நிலையிலேயே அடையாளம் காண முடிகிறது வள்ளுவர் மருத்துவம் பற்றி கூறும் போது இயற்கை மருத்துவத்தை தான் கூறுகிறார் அவர் சித்த மருத்துவத்தையோ ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளையும் கூறவில்லை மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு என்று கூறும் பொழுதே மருந்துகளை பயன்படுத்தும் அத்தனை முறைகளும் கணக்கிலிருந்து நீக்கப்படுகின்றன கழிவுகளை நீக்க வேண்டும் அளவாக சாப்பிட வேண்டும் சரியான உணவை உண்ண வேண்டும் மென்று சாப்பிட வேண்டும் இயற்கையை ஒட்டி வாழ வேண்டும் போன்ற கருத்துக்கள் பேசப்படுகின்றன விரத முறைகளைப் பற்றியும் திருமந்திரம் திருப்பாவை மற்றும் பல சித்தர் பாடல்களிலும் மேற்கோள் காட்ட முடியும் இதே போலத்தான் மற்ற நாடுகளிலும்

முதன் முதலில் அமெரிக்க சமூகத்தில் எழுதப்பட்ட நூல்தான் அடால் ஜஸ்ட் எழுதிய ரிட்டர்ன் டு நேச்சர் அது 1865 இல் எழுதப்பட்டது அதை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியவர் அண்ணல் காந்தியடிகள் அவரே இந்திய இயற்கை மருத்துவத்தின் தந்தையும் கூட அவர் பல்வேறு இயற்கை மருத்துவ கருத்துக்களை எழுதி அச்சிட்டு இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்தார் அவருடைய வாழ்க்கை வரலாறான சத்திய சோதனை புத்தகத்தில் தன்னுடைய இயற்கை மருத்துவ அனுபவங்களை சிறப்பாக விவரிக்கிறார் அவர் வக்கீல் படிப்பிற்காக லண்டன் செல்கிறார் அங்கே அவருக்கு சில வாழ்வியல் சிக்கல்கள் எழுகின்றன அந்த சிக்கல்களுக்கு எல்லாம் இயற்கை வாழ்வியல் மூலம் தீர்வு காண்கிறார் ஜஸ்ட் அவர்களின் புத்தகத்திலிருந்து பல தத்துவங்களை காந்தியடிகள் எடுத்து நடைமுறைப்படுத்துகிறார் அந்த புத்தகத்தில் மருந்துகளை பற்றிய குறிப்புகள் இல்லை சில மூலிகைகளை கூறுகிறார் பெரும்பாலும் மண் சிகிச்சை நீர் சிகிச்சை சூரிய ஒளி குளியல் விரத முறைகள் போன்ற இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளையும் அவர் கூறுகிறார் பறவைகளும் விலங்குகளும் எப்படி பஞ்சபூத சக்திகளை பயன்படுத்தி தம்மை குணப்படுத்திக் கொள்கின்றன அதேபோல மனிதர்களும் பயன்படுத்தி குணமாக்கிக் கொள்ள முடியும் என்பதை அவர் விளக்கிக் கூறுகிறார் அதை அப்படியே காந்தியடிகள் பின்பற்றுகிறார் அவருக்கு அதுவே வேதம் அதுவே மருத்துவம் சத்திய சோதனை என்ற புத்தகத்தை படித்தாலே நாம் இயற்கை மருத்துவத்தை புரிந்து கொள்ள முடியும் காந்தியின் வரலாறும் இயற்கை மருத்துவத்தின் வரலாறும் பிரிக்க முடியாதவை அவை ஒன்றே இது அமெரிக்காவிலிருந்து வந்த விதை ஜெர்மனியிலிருந்து வந்த விதையும் இருக்கிறது அதை பின்னர் பார்க்கலாம்

 
 
 

Comments


bottom of page